March 8, 2018
தண்டோரா குழு
சர்வதேச மகளிர் தினவிழாவை முன்னிட்டு கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எஸ்.என்.ஆர். கலையரங்கில் மகளிர் தினவிழா கொண்டாப்பட்டது.
கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் கு.கருணாகரன் தலைமையேற்ற இவ்விழாவில் கோயமுத்தூர் “பயோடா டெக்னாலஜிஸ் – ன் மனிதவள மேம்பாட்டுத்துறை துணைத்தலைவர் விஜயலட்சுமி, சமூக ஆர்வலர் தூய்மை இந்தியா திட்டத்தின் கோவை தூதர் தஸ்லிமா நஸ்ரின், கௌமார பிரசாந்தி அகாடெமியின் நிறுவனர் தீபா மோகன்ராஜ், பத்மஸ்ரீ . நானம்மாள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய கோயமுத்தூர் “பயோடா டெக்னாலஜிஸ் – ன் மனிதவள மேம்பாட்டுத்துறை துணைத்தலைவர் விஜயலட்சுமி,
பொறுமை, நேர்மறை எண்ணங்கள், மன்னிக்கும் குணம் இன்றைய பெண்களுக்கு அவசியம் என்றும் இதனை கடைபிடிக்கும் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சாதிக்க இயலும் எனக் கூறினார்.
இவ்விழாவில் பத்மஸ்ரீ நானம்மாளின் யோகாசன செய்முறையும் நிகழ்த்தப்பட்டது. மேலும், மாணவிகளுக்கும், பேராசிரியைகளுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.