• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்கதேச அணியிலிருந்து சகிப் அல் ஹசன் நீக்கம்

March 6, 2018 tamilsamayam.com

இந்தியா-இலங்கை-வங்கதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி நாளை தொடங்க உள்ளது.

இலங்கை சுதந்திர தின கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா-இலங்கை-வங்கதேசம் அணிகள் விளையாட உள்ளன. இந்த போட்டித் தொடர் இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நாளை தொடங்க உள்ளன. இதன் முதல் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோத உள்ளன.

சகிப் அல் ஹசன் நீக்கம் :

வங்கதேசத்தின் கேப்டனும், ஆல்ரவுண்டரில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சகிப் அல் ஹசன் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக மஹ்மதுல்லா கேப்டனாக செயல்பட உள்ளார்.

அண்மையில் வங்கதேசம்-இலங்கை-ஜிம்பாப்வே அணிகள் மோதிய போட்டி தொடரின் போது சகிப் அல் ஹசன் பந்து வீசும் இடது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் இலங்கையில் நடக்கும் முத்தரப்பு போட்டியில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க