March 5, 2018 தண்டோரா குழு
கோவையில் மத்திய அரசின் புதிய மலிவு விலை மருத்தகத்தை பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் திறந்து வைத்தார்.
மத்திய அரசின் பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி கேந்த்ரா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் மலிவான விலை மருத்து விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் ரயில் நிலையம்,ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட 50 இடங்களில் தற்போது மலிவு விலை மருந்தகம் திறக்கப்பட்டுள்ள நிலையில் மதுக்கரை கடைவீதி பகுதியில் புதிய மலிவு விலை மருந்தகத்தை பாஜக வின் மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் திறந்து வைத்தார்.
பின்னர் இது குறித்து பேசிய அவர்,
300 சதுர அடி இடமும் பார்மஷி பட்டய படிப்பிற்கான சான்றிதழுடன் வந்தால் மலிவு விலை மருந்தகம் வைப்பதற்காக முத்ரா கடன் திட்டத்தின் கீழ் வங்கி கடன் பெற்று தரப்படும் என தெரிவித்தார். மேலும் மாவட்டம் முழுவதும் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு மலிவு விலை மருந்தகம் திறக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர் மலிவு விலை மருந்தகத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
போதிய விழிப்புணர்வு இல்லாததால் இந்த மருந்தகங்களில் மருந்து வாங்க மக்கள் அச்சப்மடைவதால் வருவதில்லை.ஆனால் தரமான மருந்துகள் மட்டும் இங்கு விற்பனை செய்வதால் மக்கள் அச்சமின்றி வாங்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் அன்பரசன், அமுல்கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.