March 5, 2018
தண்டோரா குழு
காவிரி விவகாரத்தில் மார்ச் 9 இல் ஆலோசனை நடத்த வருமாறு 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
காவிரி நதிநீா் தொடா்பாக உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 16-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.மேலும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்தில் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எவ்வித நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்று தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில்,தமிழகம்,கர்நாடகம்,கேரளா,புதுச்சேரி மாநிலஅரசுகளுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.