March 5, 2018
தண்டோரா குழு
மதுரை ஆதீனத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு மதுரை ஆதீன மடாதிபதியாக நித்யானந்தா அறிவித்துக் கொண்டதை எதிர்த்து ஜெகதலப்பிரதாபன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் நீதிபதி மகாதேவன் இன்று தீர்ப்பளித்தார்.அதில்,மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான மடம் உள்ளிட்ட எந்த இடத்திலும் நித்தியானந்தா நுழையக் கூடாது என்று தீர்ப்பளித்துள்ளார்.
மேலும்,எந்த ஆதீனமாக இருந்தாலும் முறைகேட்டில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.