• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அருகே காட்டுக்குள் இருந்து வந்த மானை கடித்த நாய்களிடமிருந்து காப்பாற்றிய பொதுமக்கள்

March 3, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டம் மேற்கு மலைதொடர்ச்சியை ஒட்டி இருக்கும் வன பகுதிகளில் இருந்து  விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் வருவது வாடிக்கையாகியுள்ளது.

இந்நிலையில் இன்று(மார்ச் 3)அதிகாலை பாலக்காடு ரோட்டிலுள்ள மதுக்கரை மைல்கல் அருகே  வனப்பகுதியில் இருந்து மான்கள் கூட்டமாக ஊருக்குள் வந்துள்ளது.இதனையடுத்து அங்கிருந்த தெருநாய்கள் மான் கூட்டத்தை தூரத்தியதை அடுத்து மான்கள் மீண்டும் காட்டிற்குள் ஒட்டின. இதில் ஒரு புள்ளி மான் மட்டும் நாய்களிடம் சிக்கியுள்ளது.

நாய்கள் புள்ளி மானை கடிப்பதை பார்த்த அப்பகுதி மக்கள், மானை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.இதனையடுத்து மானுக்கு கால்நடைத்துறை மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர்.பின்பு வனத்துறையினர்  மட்டத்துக்காடு வனப்பகுதியில் மானை விட்டனர்.

மேலும் படிக்க