• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திரிபுராவில் 25 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முற்றிபுள்ளி வைத்த பாஜக

March 3, 2018 தண்டோரா குழு

திரிபுராவில் 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்து வருகிறது. மாணிக் சர்க்கார் முதல்-மந்திரியாக இருந்து வருகிறார்.

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து சட்டசபைகளுக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது.திரிபுராவில் கடந்த மாதம் 18ம் தேதியும், நாகலாந்து, மேகாலயாவில் 27ம் தேதியும் ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

இந்த மாநிலங்களில் தலா 60 தொகுதிகள் உள்ளன.திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் இறந்ததால் ஒரு தொகுதியிலும், மேகாலயாவில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் கொல்லப்பட்டதால் ஒரு தொகுதியிலும், நாகலாந்தில் என்டிபிபி கட்சி தலைவர் நெபியு ரியோ போட்டியின்றி தேர்வு பெற்றுள்ளதால் ஒரு தொகுதியிலும் தேர்தல் நடைபெறவில்லை. இதனால், இம்மாநிலங்களில் தலா 59 தொகுதிளில் மட்டுமே தேர்தல் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில்,இன்று காலை 8 மணிக்கு இந்த மாநிலங்களில் பதிவான ஓட்டுக்கள் எண்ணிக்கை தொடங்கியது. கடந்த தேர்தலில் 49 இடங்களைக் கைப்பற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இன்று காலை தொடங்கிய ஓட்டு எண்ணிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பாஜக வேட்பாளர்களும் மாறி மாறி முன்னிலையில் இருந்தனர்.

ஆரம்பத்தில் ஆட்சி அமைக்க தேவையான 30 இடங்களை தாண்டி முன்னணி வகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு பாஜக நெருக்கடி கொடுத்தது. தொடர்ந்து முன்னிலை வகித்த பாஜக 40 இடங்களை பிடித்து வெற்றி அடைந்துள்ளது. திரிபுரா சட்டசபையில் கடந்த முறை ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாத பாஜக இந்த முறை ஆட்சி அமைக்கிறது.

இதன் மூலம் திரிபுராவில் 25 ஆண்டுகளாக நடந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சிக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

மேலும் படிக்க