• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம் – மு.க.ஸ்டாலின்

March 3, 2018 தண்டோரா குழு

காவிரி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம் என்று தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் தொடா்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக எதிர்க்கட்சி தலைவா் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் உள்ளிட்டோர் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனா்.

பின்னர் முதலமைச்சருடனான சந்திப்புக்கு பின் பேசிய மு.க.ஸ்டாலின்,

காவிரி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம்.காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தினரை பிரதமர் சந்திக்க மறுப்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய அவமானம்.காவிரி வாரியம் விவகாரத்தில் மக்களை, விவசாயிகளை ஏமாற்றும் காரியத்தில் மத்திய அரசு ஈடுபடுகிறது.

மேலும்,காவிரி விவகாரத்தில் பிரதமர் சந்திக்க மறுப்பதால் திமுக எம்பிக்கள் ராஜினாமா செய்ய தயார் எனவும், தமிழக பிரதிநிதிகளை திங்கள்கிழமைக்குள் பிரதமர் சந்திக்கவில்லையெனில் சட்டப்பேரவையைக் கூட்ட நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார்.

 

 

மேலும் படிக்க