March 2, 2018
தண்டோரா குழு
கர்நாடகாவில் காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க மார்ச் 7ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
காவிரி பிரச்சனை தொடர்பாக 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பில் கூறியுள்ளது.
இந்நிலையில்,உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க கர்நாடகத்தில் மார்ச் 7ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.