March 2, 2018
தண்டோரா குழு
சென்னையில் ஒய்எம்சிஏ மைதானத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மார்ச் 8இல் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் கடந்த 21ம் தேதி மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயா், கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.இதனையடுத்து ஏப்ரல் மாதம் 4ம் தேதி அடுத்தக்கட்ட பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8ல் சென்னையில் மக்கள் நீதி மய்யம் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.