• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய மொரிசியஸ் நல்லுறவு மிக வலுவாக இருக்கின்றது – பரமசிவம்பிள்ளை வையாபுரி

March 1, 2018 தண்டோரா குழு

இந்திய மொரிசியஸ் நல்லுறவு மிக வலுவாக இருக்கின்றது என்று மொரிசியஸ் நாட்டின் துணை ஜனாதிபதி பரமசிவம்பிள்ளை வையாபுரி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

இந்திய மொரிசியஸ் நல்லுறவு மிக வலுவாக இருக்கின்றது. மொரிசியஸ் நாட்டில் 1.2 மில்லியன் தமிழர்கள் வசிக்கின்றனர், தமிழ் மொழியை ஆங்கிலம் வழியாகவே அவர்கள் கற்கின்றனர்.

தமிழ் மொழியை எழுதவும்,படிக்கவும் சிரம படிகின்றனர் எனவும் தமிழ் மொழியை மகாத்மா காந்தி பல்கலைகழகம்  மூலம் தமிழ் மொழியை கற்பிக்க தேவையான நடவடிக்கையினை மொரிசீயஸ் அரசு மேற்கொண்டு வருகின்றது.

மேலும், மொரிசியஸில் தமிழர்களின் பண்டிகைகள், பொங்கல்,சிவராத்திரி உள்ளிட்டவற்றை தொடர்ந்து சிறப்பாக கொண்டாடி வருவதாகவும், தமிழ் மொழியை தொடர்ந்து கற்று வருவதாகவும் கூறினார்.சிரியாவில் நிகழும் வன்முறை வருத்தமளிக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும் படிக்க