• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கார்த்தி சிதம்பரத்தின் மீதான கைது நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

March 1, 2018 தண்டோரா குழு

கோவையில் கார்த்தி சிதம்பரத்தின் மீதான கைது நடவடிக்கையை கண்டித்து அனைத்து மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக இன்று(மார்ச் 1) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் மீது ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ மற்றும் அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணைக்காக அவர் டெல்லியில் உள்ள அலுவலகங்களில் கடந்த மாதம் ஆஜராகி விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், நீதிமன்றத்தின் அனுமதியுடன்  லண்டன் சென்று நேற்று சென்னை திரும்பிய அவரை விமான நிலைய வளாகத்திலேயே சி.பி.ஐ அதிகாரிகள்  கைது செய்து டெல்லி அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்தின் மீதான கைது நடவடிக்கையை கண்டித்து தெற்கு தாலூகா அலுவலகம் முன்பாக அனைத்து மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாநகர் மாவட்ட தலைவர் மயூரா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்ற  இந்த ஆர்ப்பாட்டத்தில்,வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தலைவர்கள்  வி.எம்.சி. மனோகரன்,பொள்ளாச்சி சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

மேலும்,நீரவ் மோடி, மேகுல் சோக்சி, த்வாரகா தாஸ் சேத் ஜுவல்லரி என பாஜக ஆட்சியில், மோசடி பட்டியல் நீண்டு கொண்டே போவதால் அதில் இருந்து கவனத்தை திசை திருப்பவே இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளதாகவும், முறைகேடு விவகாரங்களில் காங்கிரசின் குற்றச்சாட்டுகளே பொதுமக்களிடம் அதிகம் சென்று சேருவதால் மத்திய அரசு இது போன்ற கைது நடவடிக்கைகள் மூலம் மக்களின் கவனத்தை திசை திருப்புகிறது என்றும் தெரிவித்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பினர்.

மேலும் படிக்க