March 1, 2018
தண்டோரா குழு
சந்தானம் நடிப்பில் லொள்ளு சபா இயக்குநர் ராம்பாலா இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளிந்த படம் ‘தில்லுக்கு துட்டு’. இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கணும், மன்னவன் வந்தானடி ஆகிய படங்கள் ஃபைனான்ஸ் பிரச்னையில் முடங்கிக் கிடக்கின்றன. இந்நிலையில், ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் முயற்சி நடந்து வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், “தில்லுக்கு துட்டு 2” படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஹைதராபாத்தில் ஆரம்பமானது. இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அறிமுக நாயகி தீப்தி நடிக்கவுள்ளார்.