• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கார்த்தி சிதம்பரத்துக்கு ஒரு நாள் சிபிஐ காவல் – டெல்லி நீதிமன்றம்

February 28, 2018 தண்டோரா குழு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை 1 நாள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

அந்நிய முதலீடுக்கான அனுமதி பெற்றுத்தர ஐஎன்எக்ஸ் நிறுவனத்திடம் ரூ. 10 லட்சம் பெற்றதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரதின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சென்னையில் சிபிஐ போலீசார் இன்று கைது செய்தனர்.

இது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனர்.  இதனையடுத்து, கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று சென்னையில் சிபிஐ போலீசார் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்தனர்.  இதையடுத்து, இன்று மாலை டெல்லி சிபிஐ சிறப்பு நிதிமன்றத்தில் கார்த்திக் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.

டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்டார். கார்த்தி சிதம்பரத்தை 15 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது.இதையடுத்து, கார்த்தி சிதம்பரத்தை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க