February 28, 2018
தண்டோரா குழு
கோவையின் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் திருவிழா தேரோட்டம் இன்று(பிப் 28)நடைபெற்றது.
கோவை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் திருவிழா தேரை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர். கோவையின் காவல் தெய்வமாக வணங்கப்படும் கோனியம்மன் கோவில் மாசி தேர் திருவிழா கடந்த மாதம் பூச்சாட்டுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து கொடியேற்றம், அக்னிசாட்டு திருவிளக்கு வழிபாடு நடந்தது. நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் இன்று நடைபெற்றது.
பின்னர் ராஜவீதியில் உள்ள தேர்நிலை திடலில் நிறுத்தப்பட்டிருந்த தேரில் கோனியம்மன் எழுந்தருளினார்.அம்மனை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசித்தனர்.அதன்பிறகு தேரோட்டம் தொடங்கியது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தினர்.இந்த தேர் திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேரோட்டத்தின் காரணமாக கோவை ராஜ வீதி, டவுன்ஹால் , உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.