February 28, 2018
தண்டோரா குழு
காஞ்சி சங்கராச்சாாியாா் மறைவுக்கு பிரதமர் மோடி,முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம்,திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட தலைவா்கள் இரங்கல் தொிவித்துள்ளனா்.
பிரதமர் மோடி:காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மறைவால் வேதனை அடைந்தேன்.
முதலமைச்சர் பழனிசாமி:ஜெயேந்திரர் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன்; ஜெயேந்திரரை இழந்து வாடும் ஆன்மீக பக்தர்கள், காஞ்சி சங்கர மட நிர்வாகிகளுக்கு ஆழ்ந்த இரங்கல்.
துணை முதலமைச்சர் ஓபிஎஸ்:காஞ்சி மடத்தின் பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது; அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
மு.க.ஸ்டாலின்:காஞ்சி பீடாதிபதி ஜெயேந்திரர் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன் ஜெயேந்திரரை இழந்து வாடும் அவருடைய விசுவாசிகள், சங்கர மட பணியாளர்களுக்கு ஆறுதல்.
மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி:லட்சக்கணக்கானோருக்கு வழிகாட்டியாக இருந்தவர் ஜெயேந்திரர்.
பாஜக பொதுச்செயலர் ராம் மாதவ்:சீர்த்திருத்தவாதியான ஜெயேந்திரர் நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்றியவர்.
ராகுல்காந்தி:தனது கொள்கைகளால் லட்சக்கணக்கான பக்தா்களுக்கு முன்னோடியாக விளங்கியவா் சங்கராச்சாாியாா். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளாா்.
வானதி சீனிவாசன்:ஜெயேந்திரர் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.
தமிழிசை சவுந்தரராஜன்:சமூக சிந்தனையுடன் கூடிய ஆன்மீகவாதி காஞ்சி ஜெயேந்திரரை பாரதம் இழந்திருக்கிறது.
கீ.வீரமணி:திராவிடா் கழக தலைவா் கீ.வீரமணி ஜெயேந்திரரின் மறைவுக்கு இரங்கல் தொிவித்துள்ளாா்.
ராமதாஸ்:பா.ம.க. நிறுவனா் ராமதாஸ் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மறைவுக்கு இரங்கல் தொிவித்துள்ளாா்.