• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கால்பந்து வீரராக மாறிய ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்!!

February 28, 2018

சர்வதேச ஓட்டப்பந்தயப் போட்டிகளில் ஜாம்பவனாக திகழ்ந்த உசேன் போல்ட், தற்போது கால்பந்தாட்ட அணி ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறியுள்ளார்.

ஓட்டப்பந்தயப் போட்டிகளின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த உசேன் போல்ட். ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப்பதக்கங்களை பெற்ற போல்ட். 100 மீ, 200 மீ, 4×100 உள்ளிட்ட ஓட்டபந்தய பிரிவுகளில் உலகசாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு ஓட்டப்பந்தயப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். இதையடுத்து, உசேன் போல்ட் தற்போது கால்பந்து அணி ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

31 வயதாகும் உசேன் போல்ட், தான் ஒப்பந்தம் செய்துள்ள அணியைப் பற்றி இன்று அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க