• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீதேவியின் உடல் இன்று இரவு இந்தியா கொண்டு வரப்படுகிறது

February 27, 2018 தண்டோரா குழு

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று இரவு துபாயிலிருந்து தனி விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்படுகிறது.

திருமண நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு குளியறையில்  இருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததார்.அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் அவரது உடல் இந்தியாவிற்கு எப்போது கொண்டுவரப்படும் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதற்கிடையில், நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக அரசு வழக்கறிஞர் சான்றிதழ் வழங்காததால், அவரது உடல் இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உடலை பெற இந்திய தூதரக அதிகாரிகளும் அவரது குடும்பத்தினரும் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர்.இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவி உடலை ஒப்படைப்பதற்கான கடிதத்தை துபாய் போலீசார், அவரது உறவினர்கள் மற்றும் இந்தியதூதரக அதிகாரிகளிடம் வழங்கினர்

இதையடுத்து, நடிகை ஸ்ரீதேவி உடலை பதப்படுத்தும் பணி நிறைவடைந்து துபாய் விமான நிலையத்திற்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டது.இதைதொடர்ந்து இன்று மாலை 6.30 மணிக்கு துபாயிலிருந்து ஸ்ரீதேவி உடலுடன் தனி விமானம் புறப்பட்டு, இரவு 9.30 மணிக்கு மும்பை கொண்டு வரப்படுகிறது.

 

மேலும் படிக்க