• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நல்ல வேளை சென்னை அணியில் இல்லை – அஸ்வின்

February 27, 2018 tamilsamayam.com

ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டது குறித்து அஸ்வின் கூறியுள்ளது பெருமையளிக்கும் வகையில் உள்ளது.

ஐபிஎல் போட்டியில் ஆரம்பம் முதல் (2009 – 2015)சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த அஸ்வின், கடந்த இரண்டு சீசனாக சென்னை அணி இல்லாததால் புனே அணியில் இருந்தார்.

இந்தாண்டு புதிய ஏலம் அடிப்படையில் அவர் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார். தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக ரவிசந்திரன் அஸ்வினை அந்த அணியின் ஆலோசகரான விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார்.

அஸ்வின் கூறியதாவது :

பஞ்சாப் அணி கேப்டனாக தேர்வு செய்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. யுவராஜ் சிங், ஆரோன் பின்ச், டேவிட் மில்லர் போன்ற முன்னனி வீரர்களும், சிறப்பாக செயல்படும் பல இளம் வீரர்களும் இடம்பெற்றுள்ள அணிக்கு தலைமை ஏற்பது பெருமை.

சக வீரர்களிடமிருந்து முடிந்தவரை அவர்களின் முழுத் திறனை வெளிக் கொண்டு வர முடியும் என்ற தன்னம்பிக்கை உள்ளது.

என் 21 வயதில் முதல் தர போட்டிகளில் தமிழ அணிக்காக ஏற்கனவே கேப்டன் பணியில் சிறப்பாக செயல்பட்ட அனுபவங்கள் உள்ளன. தற்போது எனக்கு கிடைத்துள்ள புதிய வாய்ப்பை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். என தெரிவித்துள்ளார்.

கேப்டனாக அஸ்வினை அறிவித்த நிலையில், கிரிக்கெட்டில் அஸ்வின் செய்த சாதனைப் பட்டியல்களை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க