• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடக தேர்தல் லாபத்திற்காக தமிழகத்தை போராட்ட களமாக்க வேண்டாம் – மு.க.ஸ்டாலின்

February 27, 2018 தண்டோரா குழு

கர்நாடக தேர்தல் லாபத்திற்காக தமிழகத்தை போராட்ட களமாக்க வேண்டாம்  என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மு.க ஸ்டாலின்,

தமிழகம் வந்த பிரதமர் மோடி,காவிரி பிரச்சனை பற்றிப் பேசாமல் அமைதி காத்ததும்,உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில்,காவிரி மேலாண்மை வாரியத்தை உரிய காலக்கெடுவிற்குள் அமைப்பது குறித்து உத்தரவாதம் தர இயலாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

மேலும்,ஆறு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை நிச்சயம் அமைக்க வேண்டும் என்றும் கர்நாடக தேர்தல் லாபத்திற்காக தமிழகத்தை போராட்ட களமாக்க வேண்டாம்  என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க