February 26, 2018
தண்டோரா குழு
இறுதி ஊர்வலத்தில்தான் பங்கேற்க மாட்டேன், இறுதி சடங்குகளில் பங்கேற்பேன் என நடிகர் கமலஹாசன் கூறியுள்ளார்.
இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிருந்த போது மாரடைப்பால் நேற்று முன்தினம் காலமானார். உடல்கூறு ஆய்வு முடிந்து அவரது உடல் இன்று மாலைக்குள் இந்தியா கொண்டுவரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடிகர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஸ்ரீதேவியின் கணவர் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற, மும்பை செல்கிறேன். இறுதி ஊர்வலத்தில் தான் பங்கேற்க மாட்டேன், இறுதி சடங்குகளில் பங்கேற்பேன் என நடிகர் கமலஹாசன் கூறினார்.