February 24, 2018
தண்டோரா குழு
ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ”நமது புரட்சித்தலைவி அம்மா” இன்று வெளியீடப்பட்டது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளை ஓட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவவெண்கல சிலை இன்று திறக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது புரட்சி தலைவி அம்மா நாளேடை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் வெளியிட்டனர்.இது அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.