• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பசியால் உணவை திருடிய மனநலம் பாதிக்கப்பட்டவரை அடித்து சித்தரவதை செய்து செல்பி எடுத்த இளைஞர்கள்

February 23, 2018 தண்டோரா குழு

கேரளாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர் பசியால் உணவை திருடியதால்  அவரை கட்டிவைத்து சித்தரவதை செய்து இளைஞர்கள் சிலர் அந்த காட்சியுடன் செல்ஃபி எடுத்த அவலம் அரங்கேறியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த  அட்டப்பாடி கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் மது என்ற 27 வயதான ஒரு இளைஞர்வசித்து வந்துள்ளார். பசியால் அவர் கடையில் உணவுபண்டகளை திருடியுள்ளார். இதனால், இளைஞர்கள் சிலர் அவரை கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.      இந்த தாக்குதலின் முன்னாள் நின்று இளைஞர்கள் சிலர் செல்ஃபி எடுத்துள்ளனர்.பின்னர் போலீசாருக்கு இதுபற்றி தகவல் கிடைக்க, அங்கு வந்து, தாக்கப்பட்ட இளைஞரை மீட்டனர். அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து, விசாரணை செய்த போலீசார் 7 பேர் மீது வழக்கு தொடுத்துள்ளது.

மதுவை தாக்கியதாக 7 பேரை அடையாளம் கண்டுள்ள போலீசார், இன்னும் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்க