February 23, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விளம்பர படங்கள் மற்றும் போஸ்டர்கள் ஓட்டுவதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோயமுத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் சமீப காலமாக அரசு அலுவலகங்களில் தனியார்களின் சுவரொட்டிகள் மட்டும் விளம்பரங்கள் ஒட்டுப்படுகிறது. அரசு சுவர்களிலோ அரசு அலுவலகங்களின் கட்டிடங்கள் மீதோ, அரசு அலுவலக வளாகங்களிலோ தனியர்கள் சுவரொட்டிகள் ஒட்டுவதோ, சுவற்றில் எழுதுவதோ விளம்பர பலகைகள் வைப்பதோ சட்டத்திற்கு புறம்பான செயலாகும். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இனி வரும் காலங்களில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள் மீது Prevention of Disfigurement Act 1959 ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையில் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.