February 23, 2018
தண்டோரா குழு
நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும் இருவரின் நோக்கமும் மக்களுக்கு நல்லது செய்வதே என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில், நடிகர் ரஜினிகாந்த் தனது நெல்லை மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த்
கமலுக்கும் எனக்கும் வேறு வேறு பாதை என்றாலும் இருவருக்கும் மக்கள் சேவை என்ற ஒரே இலக்கு தான்.கமலின் மக்கள் நீதி மய்யம் கூட்டத்தின் துவக்க நிகழ்ச்சியை முழுவதுமாக பார்த்தேன். இதற்கு பின்னர் மீண்டும் அவருக்கு நான் வாழ்த்தை தெரிவித்து கொள்கிறேன். கமல் ஒரு திறமைசாலி அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு தெரிகிறது. மக்கள் நலனுக்காக ஒவ்வொருவரும் வேறுபாட்டு வழியில் சென்றாலும் போய்ச்சேரும் இடமும் நோக்கமும் ஒன்று தான்”என்று கூறினார்.