February 23, 2018
தண்டோரா குழு
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகரை தெற்கு மண்டலத்திற்கு இடமாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் நகை கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க ராஜஸ்தான் சென்ற போது மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து பெரியபாண்டியன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையில்,பெரியபாண்டியனை காப்பாற்ற முயற்சித்த போது அவருடன் சென்ற உதவி காவல் ஆய்வாளர் முனிசேகர் தவறுதலாக சுட்டார் என்று தெரியவந்தது.இதன் பின்னர் முனிசேகர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகரை தெற்கு மண்டலத்திற்கு இடமாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.