• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரும்புக் கடைகளில் குவிந்து உள்ள தமிழக அரசால் வழங்கப்பட்ட இலவசப் பொருட்கள்!

February 23, 2018 தண்டோரா குழு

தமிழக அரசால் இலவசமாக வழங்கப்பட்ட மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்த முடியாமல் பழுதாகியதால் கோவையில் பல்வேறு இரும்பு கடைகளில் போடப்பட்டு அதில் உள்ள பொருட்கள் அனைத்தும் உடைக்கப்பட்டு தனித்தனியே விற்கப்படுகிறது.

தமிழக அரசால் அனைத்து பகுதிகளிலும் இலவசமாக மிக்சி, கிரைண்டர், மின் விசிறி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில் அந்த பொருட்களில் போதிய அளவிலான தரம் இல்லாத காரணத்தால்  விரைவில் சாதனங்கள் பழுதாகி உள்ளது.

இந்நிலையில் கோவையில் பல்வேறு பகுதிகளில் உள்ள பழைய இரும்புக்கடையில் குவியல் குவியலாக இலவச கிரைண்டர்கள், மிக்சி, மற்றும் கிரைண்டர்கள் பழுதாகி கிடக்கிறது. இந்த சாதனங்களை தனித்தனியே உடைத்து இரும்பு கடைக்கு விற்பனை செய்து வருகின்றனர். நிதி ஒதுக்கி  இலவசங்களை வழங்கினாலும் அதில் பயனில்லாமல் போதிய தரம் இல்லாத காரணத்தால் இந்த திட்டம் முற்றிலும் பயனற்று போகி உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்து உள்ளனர்.

மேலும் படிக்க