February 23, 2018
தண்டோரா குழு
கோவை கொடிசியா அரங்கத்தில் 76-வது அனைத்து இந்திய ஆப்தாமாலஜிக்கல் சொசைட்டி மாநாடு நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று காலை முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி கண் விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சியை கொடியசைத்து வைத்து துவங்கி வைத்தார். மேலும் அந்த வாக்கத்தான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 2 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நான் முதல்முறையாக கோவைக்கு வருகிறேன். இந்த நகரம் மிகவும் தூய்மையாக உள்ளது.எனக்கு மிகவும் பிடித்து உள்ளது.மேலும் கண் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நாம் கண்ணை இழந்தால் நம்மால் 50 சதவீதம் ஒன்றும் செய்ய முடியாது அனைத்தையும் இழந்ததற்கு சமம், எனவே நாம் கண்ணை பாதுகாக்க வேண்டும் என்றார்.
தென் ஆப்பிரிக்காவில் இந்திய வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.இந்திய அணி டெஸ்ட் போட்டியில் நன்றாக செயல்பட்டு உள்ளனர். தற்போது இந்திய அணியில் உள்ள அனைவரும் நல்ல உடல் தகுதியுடன் உள்ளனர்.
மேலும்,மற்ற நாடுகளை காட்டிலும், இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களை தேர்வு செய்வதில் வெளிப்படையாக செயல்படுகிறது.இந்திய மகளிர் அணியினர் திறைமையாக விளையாடுகின்றனர்.
19 வயதிற்கு உட்பட்டோர்கான கிரிக்கெட் போட்டியில் பயிற்சியாளர் டிராவிட் தலைமையில் பல வெற்றிகளை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய அணியில் மனிஷ் பாண்டே,சாஹா, ஹர்தீக் பான்டியா போன்றவர்கள் மிகவும் திறமையாக செயல்படுகின்றனர் என்றார்.