February 22, 2018
காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்புகள், விவசாய சங்கங்கள் என 54 அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி மூன்று முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தல்.
2.அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமரை விரைவில் சந்திப்பது.
3.177.25 டிஎம்சி நீர் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை அதிகரிக்க சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்த மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும்,11 ஆண்டுகளுக்கு பின்னா் தமிழக அரசியல் வரலாற்றில் இது போன்ற அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.