February 22, 2018
தண்டோரா குழு
கோவையில் சமூக நீதிக்கான மாணவர் பேரவையின் சார்பாக,தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இன்று(பிப் 22)ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் அனைத்து அமைப்புகளின் சமூக நீதிக்கான மாணவர் பேரவையின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே சமூக நீதிக்கான மாணவர் பேரவையின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கக்கோரியும், சட்டப்பேரவையில் நீட் எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் இதன் தொடர்ச்சியாக மார்ச் மாதம் தலைநகர் டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான கருத்தரங்கம் சமூக நீதிக்கான மாணவர் பேரமைப்பு சார்பாக நடத்த இருப்பதாகவும், அதனைத்தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்த இருப்பதாக தெரிவித்தனர்.