February 22, 2018
தண்டோரா குழு
நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய அரசியல் பிரகடனம் குறித்தும் தலைவர்களுடனான சந்திப்பு குறித்தும் விளக்கமளித்துள்ளார்.
ரஜினிகாந்த்:
ரஜினியை ரகசியமாக சந்தித்தேன்! எதிரும், புதிருமாக இருந்தாலும் மரியாதை குறைந்துவிடக்கூடாது. போர் தர்மம் வேண்டும்.பிக்பாஸ் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே கட்சி ஆரம்பிக்கும் முடிவை ரஜினியிடம் கூறிவிட்டேன்.
கருணாநிதி:
அரசியல் பயணத்தை கருணாநிதியிடம் சொன்னேன்,சிரிப்பு மூலம் வாழ்த்துகிறார் என்பதை புரிந்து கொண்டேன்.
விஜயகாந்த்:
அரசியலில் சீனியரிடம் வாழ்த்துப்பெற வந்துள்ளேன் என கூறியபோது விஜயகாந்த் ரசித்து சிரித்தார். இன்னும் அதே விஜியாகத்தான் இருக்கிறார் என் நண்பர்.அரசியல் பிரவேசம் குறித்து அவரிடம் பேசியபோது ‘நீங்களெல்லாம் வரணும்’ என கூறினார்.
நல்லகண்ணு:
ஐயா நல்லகண்ணுவை சந்தித்ததற்கான காரணம் அவரின் பெயரிலேயே உள்ளது.
டி.என்.சேஷன்:
மாற்றத்திற்கான முதல் விதையாக இருந்த டி.என். சேஷனை சந்தித்ததில் பெருமை.அறம் வளர்த்த நாயகன் என முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன் என்னை அழைத்தார்.
அரவிந்த் கெஜ்ரிவால்:
சிறந்த நடிகரான கமல் உண்மையான ஹீரோ.