February 22, 2018
மதுரை பொதுக்கூட்டத்தில்கூடிய கூட்டம் சினிமா நட்சத்திரத்தை பார்க்கக் கூடிய கூட்டமல்ல என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமலஹாசன் மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் நேற்று தனது கட்சியின் பெயரை அறிவித்தார். மதுரையில் நடந்த பிரம்மாண்ட மாநாட்டில் வெள்ளை, சிவப்பு வெள்ளை நட்சத்திர கொடியை ஏற்றி, மக்கள் நீதி மய்யம் என தனது கட்சியின் பெயரை அறிவித்தார்.
இந்நிலையில் நேற்றைய பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகர் கமல்ஹாசன்,
மதுரை பொதுக்கூட்டத்தில் கூடிய கூட்டம் சினிமா நட்சத்திரத்தை பார்க்கக் கூடிய கூட்டமல்ல. நான் மட்டும் ஊழலை ஒழிக்க முடியாது, நீங்களும் வாருங்கள் சேர்ந்து ஊழலை ஒழிப்போம்.
சாதி, மதம் அறவே நீக்கப்பட வேண்டும்,ஊழலை குறைத்தால் மின்சாரம் வரும். சாதி, மதம் அறவே நீக்கப்பட வேண்டும்,ஊழலை குறைத்தால் மின்சாரம் வரும்
ஆட்சிக்கு வந்தால் குவாட்டரும், ஸ்கூட்டரும் இருக்காது, இலவசம் இருக்காது, வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று கூறினார்.
மேலும்,நீங்கள் இடதுசாரியா, வலதுசாரியா என்கிறார்கள் அதனால் தான் மய்யம் என பெயர் வைத்தேன்.மக்கள் நீதி மய்யத்தில் யாரும் நிரந்தர முதல்வராக இருக்க மாட்டார்கள்.
நல்ல கட்சிக்கு வாக்களித்தீர்கள் என்றால் ஆண்டுக்கு ரூ.6000 இல்லை ரூ.6 லட்சம் கிடைத்திருக்கும்.மேலும்,கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும், ஆனால் மறந்தவையாக இருக்காது என்று கமல்ஹாசன் கூறினார்.