• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவிரி விவகாரத்தில் தமிழக அரசுக்கு திமுக துணை நிற்கும் – முக ஸ்டாலின்

February 22, 2018 தண்டோரா குழு

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் திமுக துணை நிற்கும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

காவிரி விவகாரம் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 39 கட்சிகள் பங்கேற்றுள்ளனர்.

இக்கூட்டத்தில் பேசிய மு.க ஸ்டாலின்,

காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு விவசாயிகளிடம் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தமிழகத்துக்கு காவிரியில் கூடுதலாக நீர் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடுவர் மன்ற இடைக்கால உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்தியது இல்லை. காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் தர வேண்டும்.காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் முயற்சிக்கு திமுக துணை நிற்கும் என  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறைக்கப்பட்ட 14.75 டி.எம்.சி. நீரை திரும்பப் பெற சட்ட ரீதியாக அரசு அணுக வேண்டும்.விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆலோசனைப்படி வாட்டர் செக்யூரிட்டி போர்டு அமைத்து நீர் சேமிப்பு வழிசெய்ய வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.அதைப்போல்  வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் வெளியிட அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

மேலும் படிக்க