February 22, 2018
தண்டோரா குழு
கோவையில் கைது செய்யப்பட்ட பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.
கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு 30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பல்கலைகழக துணைவேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் பிப் 3 ம் தேதி கைதுசெய்யப்பட்டனர்.அன்றைய தினம் இரவே இருவரும் சார்பிலும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இதனையடுத்து இவர்களது ஜாமீன் மனு கடந்த 12 ஆம் தேதி தள்ளுபடி ஆன நிலையில், கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இம்மனு மீதான விசாரணை இன்று நடைப்பெற்றது.இம்மனுவை விசாரித்த நீதிபதி துணைவேந்தர் கணபதியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.