• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சுங்கம் அரசு போக்குவரத்து பணிமனையில் தரமற்ற உணவு ஊழியர்கள் புகார்

February 21, 2018 தண்டோரா குழு

கோவை சுங்கத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கேன்டீனில் தரமற்ற அரிசியில் (பிளாஸ்டிக் அரிசி) தயாரிக்கப்படும் உணவு வழங்கப்படுவதாக போக்குவரத்து ஊழியர்கள் புகார் அளித்தனர்.

இந்த அரிசியில் தயாரிக்கப்பட்ட சாதத்தை  உருட்டி வீசினால் பந்து போல மேலே எழும்புவதாக குற்றச்சாட்டி 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று மதிய உணவை புறக்கணித்தனர்.

மேலும் இந்த உணவை உண்ட சில தொழிலாளர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டதாகவும், தரமற்ற சாதம் வழங்கப்படுவது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர்.

மேலும், ராணியம்மா என்பவரே சுங்கம் பணிமனையின் கேண்டீன் ஒப்பந்ததாரர் என்றும் அவரை மாற்ற வேண்டும் எனவும் பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.பல்வேறு சமயங்களில் தரமற்ற அரிசியை போல் காய்கறிகளும் அழுகிய நிலையில் இருப்பதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க