February 21, 2018
தண்டோரா குழு
மொபைல் எண்களை 13 இலக்கமாக மாற்றும் திட்டம் ஏதும் இல்லை என்று தொலைத்தொடர்புத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் செயல்படும் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் தொலைத்தொடர்புத் துறை கடந்த ஜனவரியில் அனுப்பிய சுற்றறிக்கையில், இனி புதிதாக அளிக்கப்படும் அனைத்து மொபைல் எண்களும் (M2M) 10 இலக்கங்களுக்கு பதிலாக 13 இலக்கமாகமாற்றப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த முன்னெடுப்பை நடவடிக்கையை தொலைதொடர்புத் துறை எடுத்துள்ளது. இதனால், இனி நாம் பயன்படுத்தும் 10 இலக்க மொபைல் எண்கள் இனி 13 இலக்க எண்ணாக மாறுமா என பொதுமக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், அப்படிப்பட்ட திட்டம் ஏதும் இல்லை என தொலைத்தொடர்புத் துறை விளக்கம் அளித்துள்ளது. தொழிற்துறை பயன்பாடுகளுக்கான Smart Metering, Asset Tracking Solutions, Equipment Monitoring Solutions போன்ற சிம் அடிப்படையிலான எம்2எம் சாதனங்களுக்கு மட்டுமே 13 இலக்க எண் வழங்கப்பட உள்ளதாகவும், வழக்கமான மொபைல் பயன்பாடுகளுக்கு 10 இலக்க எண்களே தொடரும் என தொலைத்தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.