• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் முதன்முறையாக அரசு பள்ளிகளில் வைபை உருவாக்கப்பட உள்ளது – அமைச்சர் செங்கோட்டையன்

February 20, 2018 தண்டோரா குழு

இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முறையாக அரசு பள்ளிகளில் வைபை உருவாக்கப்பட உள்ளது என்று கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை விமானநிலையத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,

கல்வித்துறை பொறுத்தவரை தமிழக அரசு மிக வேகமாக செயல்பட்டு வருகிறது.மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நேற்றைய தினம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர், கோவை உள்ளிட்ட312 இடங்களில் வைபை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான விபத்துக் காப்பீடு திட்டத்தை அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.அத்திட்டத்தின் மூலம் விபத்திற்கு 1 லட்ச ரூபாயும், பெரிய காயங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணத்தை 48 மணி நேரத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மேலும்,மாணவர்களுக்கும் ஆசியர்களுக்கும் நல்வழி ஏற்படுத்தும் விதமாக 16 ஆயிரம் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு புத்தக வடிவில் கவுன்சிலிங் மேற்கொள்ள உள்ளோம்.

தேர்வு சமயங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் தற்கொலை எண்ணத்தை மாற்ற சினேகா என்னும் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளோம்.

மாணவர்கள் எவ்வித பயமுன்றி தேர்வை சந்திக்க பத்து முதல் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்விற்கு கேள்வி தாள்கள் குறைக்கப்பட்டு, தேர்வு நேரம் இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க