February 20, 2018
தண்டோரா குழு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட நிலவரம் குறித்து ஆய்வு செய்ய முதல்வர் பழனிசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர் பங்கேற்கும் மாநாடு நடைபெற உள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் மார்ச் 5ம் தேதி முதல் 3 நாட்களுக்கு இந்த மாநாடு நடைபெற உள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
அதன்படி, மார்ச் 5-ம் தேதி, மாவட்ட ஆட்சியத் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கான ஒருங்கிணைந்த கூட்டம் நடைபெறுகிறது.
மார்ச் 6ம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு கூட்டம் நடைபெறுகிறது.
மார்ச் 7-ம் காவல்துறை அதிகாரிகளுக்கான கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடைசியாக 2013 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.