• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நான் பூ அல்ல;விதை ஸ்டாலின் அறிக்கைக்கு கமல்ஹாசன் பதில்

February 20, 2018 தண்டோரா குழு

நான் பூ அல்ல ; விதை… என்னை விதைத்து பாருங்கள் முளைப்பேன் என மு.க.ஸ்டாலின் அறிக்கை குறித்து நடிகர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.

திமுக செயல்  தலைவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால் மணக்காது பருவநிலை மாறும்போது ஒரு சில பூக்கள் மலரும்; மலர்ந்து உதிரும் பூக்களுக்கு மத்தியில் திமுக ஆயிரங்காலத்துப் பயிர் என கூறியிருந்தார்.  ஸ்டாலின் இந்த அறிக்கை புதிதாக அரசியல் களத்திற்கு வந்திருக்கும் ரஜினி, கமல்ஹாசன் குறித்து தான் என்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது.

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன்  பேசினார். அப்போது ஸ்டாலின் அறிக்கை குறித்து  நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கமல் மு.க.ஸ்டாலின் என்னை பற்றி சொல்லியிருக்கமாட்டார்  நான் பூ அல்ல ; விதை… என்னை விதைத்து பாருங்கள் முளைப்பேன். என்னை நுகர்ந்து பார்த்தல் மணக்காது என்றார்.

மேலும், நான் திமுகவுடன் கூட்டணி வைப்பேன் என்று ஒருபோதும் கூறியது கிடையாது என்றும்,நாளை மதுரையில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன் வருகிறார்கள்  என்று கூறினார்.

 

மேலும் படிக்க