February 20, 2018
தண்டோரா குழு
கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒன்றரை கோடி மதிப்பில் புதிய சி டி ஸ்கேன் வசதியை தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் இன்று(பிப் 20) திறந்து வைத்தார்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை ஒரு சி டி ஸ்கேன் மட்டுமே இருந்து வந்தது. இந்நிலையில் புதியதாக சி டி ஸ்கேன் வாங்குவதற்காக தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று புதியதாக சி டி ஸ்கேன் வசதியை அரசு மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த புதிய சி டி ஸ்கேன் அதி நவீன தற்போதைய புதிய தொழில் நுட்பங்களுடன் ஒன்றரை கோடி மதிப்பில் நிறுவப்பட்டு உள்ளது. ஏற்கனவே இருந்த பழைய சி டி ஸ்கேனும் புதியதாக மாற்றப்பட்டது.இதனால் வழக்கமாக நூறு பேருக்கு ஸ்கேன் செய்யும் வசதி இருந்த நிலையில் , தற்போது 200 பேருக்கு ஸ்கேன் வசதி செய்து தர முடியும் என மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.