February 20, 2018
தண்டோரா குழு
தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது என்று தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தொண்டர்களுக்கு எழுதிய மடலில் கருத்து தெரிவித்துள்ள மு.க ஸ்டாலின்
“திமுக பேரியக்கத்தை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது.திராவிட மொழி பெருமைக்கும், மக்கள் உரிமைக்கும் உணர்வூட்டும் ஆயிரங்காலத்து ஜீவாதார பயிர் திமுக. ஜீவாதாரப்பயிரை பாதுகாக்கும் வேலியாக கோடித் தொண்டர்களில் முன்னிற்கும் தொண்டனாக இருக்கிறேன்.
பல லட்சம் குடும்பங்கள் ஒன்றிணைந்து பாடுபடும் கட்சிதான் திமுக. குடும்பக் கட்சி என்று சொல்ல காரணம் பாசம் நிறைந்த கொள்கை உறவுகளாக உடன்பிறப்புகள் உள்ளனர்.
மேலும்,தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால் மணக்காது பருவநிலை மாறும்போது ஒரு சில பூக்கள் மலரும்; மலர்ந்து உதிரும் பூக்களுக்கு மத்தியில் திமுக ஆயிரங்காலத்துப் பயிர்.
அரசியல் வாழ்வில் மகிழ்ச்சித் தென்றலும், நெருக்கடிப் புயலும் மாறி மாறி வந்து போகும் அறிவாலயம் என்ற பெயருக்கேற்ப அதை அனுதினமும் தொழுதிடும் கோயிலாக தொண்டர்கள் நினைக்கின்றனர்”.என்று கூறியுள்ளார்.