February 20, 2018
தண்டோரா குழு
நடிகர் கமல்ஹாசன் நாளை தனது அரசியல் கட்சி குறித்த விவரங்களை மிக பிரமாண்டமாக மதுரையில் அறிவிக்கவுள்ளார். இதற்காக, கடந்த சில நாட்களாக பல்வேறு பிரபலங்களை சந்தித்தார்.
இந்நிலையில், நாளை நடக்கவுள்ள பொது கூட்டம் குறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.”நாளை துவங்கவுள்ளது நம் நெடும் பயணம். நாளை மாலை 6 மணிக்கு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் நமது கட்சிக் கொடியை ஏற்றவுள்ளேன். புதிய கட்சியின் பெயரையும் எமது கொள்கையின் சாராம்சத்தையும் விளக்கவுள்ளேன். வருக வருக புது யுகம் படைக்க” என்று கூறியுள்ளார்.