• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தூக்கு தண்டனை தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் மேல்முறையீடு செய்வார் – தஷ்வந்த் வழக்கறிஞர்  

February 19, 2018 தண்டோரா குழு

 

தூக்கு தண்டனை தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தஷ்வந்த் மேல்முறையீடு செய்வார்  என தஷ்வந்த் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

தமிழகமே எதிர்பார்த்து இருந்த போரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி தஸ்வந்திற்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் இன்று  தூக்கு தண்டனையும் 46 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து பரபரப்பு தீர்ப்பளிதது.  இதையடுத்து,  ஹாசினி கொலையாளி தஷ்வந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தஸ்வந்த்  வழக்கறிஞர் ராஜ்குமார், 

”செங்கல்பட்டு நீதிமன்றம் அளித்துள்ள தூக்கு தண்டனை தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த்சென்னை உயர்நீதிமன்றத்தில்மேல்முறையீடு செய்வார். மேலும் ”தண்டனையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதி ஏற்கவில்லை. அபராதம் விதிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.” என்றும் கூறினார்.

 

மேலும் படிக்க