February 19, 2018
கோவையில் செங்கல் சூலையில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று(பிப் 19)மனு அளித்தனர்.
கோவை கணுவாய்,தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூலைகள் செயல்பட்டு வருகின்றன.அங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வரும் நிலையில் அவர்களுக்கு செங்கல் சூலை நிர்வாகம் சார்பில் மொத்த குடியிருப்புகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.
இந்த சூழலில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறிய அறையிலான குடியிருப்புகள் பாதுகாப்பு இல்லாமலும் எவ்வித வசதியும் இல்லாமலும் இருப்பதால் தங்களுக்கு அரசு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.