• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹாசினி கொலை வழக்கில் தஸ்வந்திற்கு தூக்கு தண்டனை !

February 19, 2018 தண்டோரா குழு

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை அறிவித்து  குற்றவாளி என செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினியை கொலை, பலாத்காரம் வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவர் மீதான குண்டர் சட்டம் தொடர்பாக போலீஸார் விளக்கமளிக்காததால் நீதிமன்றம் குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்தது. இதனையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த தஷ்வந்த் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த் பெற்றோருடன் வசித்து வந்தார். இதற்கிடையில் வெளியே வந்த 10 மாதத்திற்குள் கடந்த டிசம்பர் மாதம் தனது தாய் சரளாவை கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த நகைகளுடன் தஷ்வந்த் மும்பைக்கு தப்பி சென்றான்.

மும்பைக்கு தப்பியோடிய தஷ்வந்தை   தனிப்படை போலீசார்  மும்பையில் வைத்து கைது செய்தனர். ஆனால் போலீசாரை தாக்கிவிட்டு  தப்பிய தஷ்வந்தை மும்பை போலீசார் உதவியுடன் மீண்டும் பிடித்து சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

தஷ்வந்த் இனியும் தப்பக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த காவல் துறையினர், சிறுமி கொலை வழக்கில் சாட்சிகளை ஆஜர்படுத்தி வழக்கை துரிதப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து 35 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. இதனை தொடர்ந்து
இந்த வழக்கில்  செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நீதிபதி வேல்முருகன் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார்.

இந்நிலையில், செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புக்கு
மத்தியில் தஷ்வந்த் ஆஜர்படுத்தப்பட்டார். இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி அறிவித்தார்.

மேலும், சி.ஆர்.பி.சி. 201, 202, 354, 363, 366 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என நீதிபதி வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதனிடையில் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு நீதிபதியிடம் தஷ்வந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். பின்னர் தண்டனை விவரங்களை சிறிது நேரம் ஒத்திவைத்த நீதிபதி சிறுமி ஹாசினி கொலை வழக்கில் பொறியாளர் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார்.

மேலும், சிறுமியை கொலை செய்த குற்றத்துக்காக தூக்கு தண்டனையும், ஆள்கடத்தல், பாலியல் வன்கொடுமை குற்றத்துக்காக 46 ஆண்டு சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க