• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆந்திராவில் தமிழர்கள் ஏரியில் சடலமாக மிதந்தது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் – வைகோ

February 19, 2018 தண்டோரா குழு

ஆந்திராவில் ஐந்து தமிழர்கள் ஏரியில் சடலமாக மிதந்தது தொடர்பாக சந்தேகமிருப்பின் சிபிஐ விசாரிக்க வேண்டும் என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுசெயலாளர் வைகோ,மற்றும் மலேசியா துணை முதல்வர் பினாங்கு ராமசாமி ஆகியோர் கோவை விமானநிலையத்தில் இன்று(பிப் 19)செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய மதிமுக பொதுசெயலாளர் வைகோ ,

ஆந்திராவில் ஏற்கெனவே கூலி தொழிலில் ஈடுபட்ட தமிழர்களை படுகொலை செய்ததை கண்டித்து பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது ஏரியில் சடலங்களாக தமிழர்கள் ஐந்து பேர் கிடந்தது அதிர்ச்சி அளிப்பதாகவும், அடித்து கொல்லப்பட்டார்களா என்ற  சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறினார்.மேலும் சந்தேகம் இருந்தால் சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.இந்த விவகாரத்தில் தமிழக அரசு ஆந்திர அரசிடம் விளக்கம் கேட்க வேண்டும் என கூறினார்.

மேலும் படிக்க