February 19, 2018
தண்டோரா குழு
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரசியலில் எனக்கு மூத்தவர் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி கட்சி தொடங்கவுள்ளதாகவும், அன்றைய தினம் ராமநாதபுரத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாகவும் நடிகர் கமல்ஹாசன் ஏற்கெனவே கூறியுள்ளார்.
இதையடுத்து கமல் பல்வேறு முக்கிய பிரபலங்களை சந்தித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரை கமல் சந்தித்த நிலையில்,இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது அலுவலகத்தில் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அரசியலில் எனக்கு மூத்தவரான விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றேன். விஜயகாந்தை சந்தித்து பல காலம் ஆனதால் அவரை சந்தித்தேன். திராவிட கொள்கைகளை கூறும் தானும் சாதித்து காட்டுவேன் என்றார்.
மேலும்,நானும் அரசியல்வாதியான பிறகு தேமுதிக அலுவலகத்துக்கு வருவது பொருத்தம் தான் என கமல் கூறியுள்ளார்.