February 17, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகா எதிர்க்கும் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், காவிரியில் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, காவிரி கண்காணிப்பு குழு ஏற்கனவே உள்ளதால் மேலாண்மை வாரியம் தேவையில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்தால், அதனை கர்நாடகா எதிர்க்கும். காவிரி பாசன மாநிலங்களை ஒருங்கிணைத்து மத்திய அரசு தீர்வுகாண வேண்டும் என்றும், மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயிக்கவில்லை என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.