February 17, 2018
தண்டோரா குழு
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக ரஜினிகாந்த் நேற்று தெரிவித்த கருத்துக்கு எதிராக கர்நாடாகவில் ரஜினிகாந்தின் உருவ பொம்மையை எரித்தனர்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதற்கிடையில், காவிரி வழக்கு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த்தனது டுவிட்டர் பக்கத்தில், காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவின் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள சன்னபட்னா என்ற இடத்தில் கன்னட அமைப்பினர் ரஜினியின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.