February 17, 2018
தண்டோரா குழு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை நடிகர் கமல்ஹாசன் இன்று(பிப் 17)சந்தித்தார்.
நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21-ம் தேதி முதல் தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளார்.இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை இன்று நடிகர் கமல்ஹாசன் சந்தித்தார்.
கட்சியை தாண்டி மக்களுக்காக சேவை செய்து வருவதால் அவரை சந்தித்தேன் என்றும்,இந்தசந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும்,இடதுசாரி தலைவர்களை மட்டும் அல்ல அனைவரையும் சந்திப்பேன் என்றும் கூறினார்.
மேலும்,மதுரையில் 21ஆம் தேதி நடக்கும் மாநாட்டில் பங்கேற்க நல்லகண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பு குறித்து இந்திய கம்யூ., மூத்த தலைவர் நல்லக்கண்ணு கூறுகையில்,அரசியல் காரணங்களுக்காக நடிகர் கமல் என்னை சந்திக்கவில்லை.மேலும் நடிகர் கமல் தனது கொள்கையை அறிவிக்கும்போது தான் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து கூற முடியும் என்று கூறினார்.
இந்நிலையில் நேற்று முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி சேஷனை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.